Monday, 27 February 2017

ஐந்து வகை நிலம் - (ஐவகை நிலம்)

  • மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை
  • காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை
  • இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது.
  • வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்,
  • கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.



திணைஉரிப்பொருள்விளக்கம்
குறிஞ்சிபுணர்தலும், புணர்தல் நிமித்தமும்ஆண் பெண் உடலுறவு
முல்லை(பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு) இருத்தலும், இருத்தல் நிமித்தமும் * ஆனிரையோடு மீளும் வரையில் பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இது நிலத்தியல்பு. * பொருள் தேடச் சென்றவர் மீளும் வரையில் (பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு) இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இது வாழ்க்கை இயல்பு * போருக்குச் சென்றவர் மீளும் வரையில் பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இது நாட்டின் இயல்பு * ஓதல் முதலான பிற பிற பிரிவுகளையும் இங்கு எண்ணிக்கொள்ள வேண்டும். ஒதற்பிரிவு என்பது கல்வி கற்கச் செல்லுதல்.புறப்பொருள் நிமித்தம் பிரிந்த தலைவன் வருகைக்காகத் தலைவி காத்திருத்தல்
மருதம்ஊடலும், ஊடல் நிமித்தமும்.அகவொழுக்கப் பிரிவு * வேறொருத்தியோடு வாழ்ந்த தலைவனிடம் தலைவி பிணக்கிக்கொள்ளுதல்
நெய்தல்இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.முல்லை நிலத்தில் கணவன் திரும்பி வருவது உறுதி என்பதனால் ஆற்றிக்கொண்டு இருத்தல் உரிப்பொருள் ஆயிற்று * கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோரது நிலை அதுவன்று. எனவே மனைவி கவலைப்படுவது இரங்கலாயிற்று.
பாலைபிரிதலும், பிரிதல் நிமித்தமும்
பொருள், போர், கல்வி முதலான புறப்பொருள் நிமித்தம் தலைவன் பிரிதலும், தலைவி வாடுதலும்



சிறுபொழுதுமணி (24 மணி கணக்கீடு)(60 நாழிகை என்பது ஒரு நாள்) (24 நிமிடம் என்பது ஒரு நாழிகை)
காலை6 முதல் 10 மணி
நண்பகல்10 முதல் 14 மணி
எற்பாடு14 முதல் 18 மணி
மாலை18 முதல் 22 மணி
யாமம்22 முதல் 2 மணி
வைகறை2 முதல் 6 மணி
பெரும்பொழுதுகால எல்லையைக் குறிக்கும் வழக்கிலுள்ள தமிழ்மாதப் பெயர்கள்
இளவேனில்சித்திரை, வைகாசி
முதுவேனில்ஆனி, ஆடி
கார்ஆவணி, புரட்டாசி
கூதிர் (குளிர்)ஐப்பசி, கார்த்திகை
முன்பனிமார்கழி, தை
பின்பனிமாசி, பங்குனி
திணைபெரும்பொழுதுசிறுபொழுதுதொல்காப்பிய நூற்பா
குறிஞ்சிகூதிர், முன்பனியாமம்952
முல்லைகார், முன்பனிமாலை952
மருதம்-வைகறையாகிய விடியல்954
நெய்தல்-எற்பாடு (ஏற்பாடு)954
பாலை (நடுவுநிலைத் திணை)இளவேனில், முதுவேனில், பின்பனிநண்பகல்955, 956

வ.

ண்
திணை
முதற்பொருள்
கருப்-
பொருள்கள்
சில
உரிப் பொருள்-
கள்
நிலம்
பொழுது



1.

குறிஞ்சி

மலையும்
மலை
சார்ந்த
நிலமும்
சிறு
பொழுது

நள்ளிரவு
பெரும்
பொழுது

குளிர்காலம்

முருகன்,
குறவன்,
கிளி,
மயில்,
புலி,
அருவிநீர்,
சந்தன
மரம்,
தினை
அரிசி,
வெறியாடல்

புணர்தலும்
புணர்தல்
நிமித்தமும்
(நிமித்தம்=
காரணம்;
புணர்தல்
=
ஒன்று
சேர்தல்)

2.

முல்லை

காடும்
காடு
சார்ந்த
நிலமும்

மாலை

மழைக்
காலம்

திருமால்,
ஆயர்,
காட்டுக்
கோழி,
மான்,
முயல்,
காட்டாறு,
ஆடு,
வரகு,
குழலூதுதல்,
ஏறு தழுவுதல்.

இருத்தலும்
இருத்தல்
நிமித்தமும்
(இருத்தல்=
பிரிவைப்
பொறுத்து
இருத்தல்)

3.

மருதம்

வயலும்
வயல்
சார்ந்த
நிலமும்

வைகறை

கார்காலம்
முதலான
எல்லாக்
காலமும்
உரியது.

இந்திரன்,
உழவன்,
அன்னம்,
எருமை,
ஆறு,
கிணறு,
தாமரை,
நெல்.
அரிசி,
உழவு.

ஊடலும்
ஊடல்
நிமித்தமும்
(ஊடல்=
தலைவி,
தலைவன்
மீது கோபம்
கொள்-
ளுதல்)

4.

நெய்தல்

கடலும்
கடல்
சார்ந்த
பகுதியும்

பிற்பகல்
(சூரியன்
மறையும்
நேரம்)

கார்காலம்
முதலான
எல்லாக்
காலமும்
உரியது.

வருணன்,
பரதவர்,
கடற்காகம்,
சுறா மீன்,
பாக்கம்,
உவர்நீர்க்
கேணி,
தாழைமலர்,
மீனும்
உப்பும்
விற்றல்,
கடல்
ஆடல்.

இரங்கலும்
இரங்கல்
நிமித்தமும்
(இரங்கல்=
பிரிவு
தாங்காது
தலைவி
வருந்துதல்)

5.

பாலை

வறண்ட
மணற்
பகுதி
மணலும்
மணல்
சார்ந்த
பகுதி-
யும்.

நண்பகல்

வேனிற்
காலம்

கொற்றவை,
எயினர்,
மறவர்,
புறா,
பருந்து,
செந்நாய்,
குராசு மலர்,
வழிப்பறி,
பகற் சூறை.

பிரிதலும்
பிரிதல்
நிமித்தமும்
(பிரிதல்=
தலைவன்
தலைவியைப்
பிரிதல்)
பிரிவும்
அதை
ஒட்டிய
செயல்பாடு-
களும்

1 comment:

  1. 1등 사이트 - CasinoBeats
    3.8 Million Points. If your bet 벳 365 doesn't match your 바카라사이트 bet, you might 사이트 추천 win a big money if your bet loses! The best betting 네이버 룰렛 sites for Asian players BEST 바카라 to try

    ReplyDelete